சென்னை, பிப்.7:ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. இதில் நேரு குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினருக்கும் சிபிஐ சம்மன் அனுப்ப முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி காலை நடைபயிற்சிக்குச் சென்றபோது காணாமல் போனார். பிறகு அன்றே அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. . கொலை வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் 5 ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.
சிபிஐ விசாரணைக்கு மாற்ற வழக்கு ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமெனக் கோரி அவரது மனைவி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இதுவரை ரகசிய அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் குற்றவாளிகளின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை இந்த வழக்கில் இதுவரை 1,100 பேருக்கு மேல் விசாரிக்கப்பட்டனர். ராமஜெயத்தைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பேரில் 294 வாகனங்கள் ஆய்வுசெய்யப்பட்டன. 2910 மொபைல் போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றைப் பயன்படுத்தியவர்கள் விசாரிக்கப்பட்டிருப்பனர்.
ஆனாலும் கொலையாளிகள் சிக்கவில்லை. இதனையடுத்து ராமஜெயம் நெருங்கிய உறவினர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.