Home » Flash News » நித்தியனந்தா ஆசிரமத்திலிருந்து 2 பேர் மீட்பு

நித்தியனந்தா ஆசிரமத்திலிருந்து 2 பேர் மீட்பு

தேனி, பிப்.7:பாஸ்கரன் என்பவர் தேனி, ஜெயமங்கலம் போலீசாரிடம் அளித்த புகாரில் தன்னுடைய மகன் மனோஜ் மற்றும் பேத்தி நிவேதாவை நித்தியானந்தாவின் சீடர்கள் மூளைச்சலவை செய்ததாக தெரிவித்தார்.

இதில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே அறியாத இருவரும் எங்களின் பேச்சையும் மீறி நித்யானந்தாவில் பிடதி ஆசிரமத்திற்கு சென்று விட்டனர். நித்யானந்தா சீடர்களின் பேச்சில் மயங்கி பிடதி ஆசிரமம் சென்றவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று பாஸ்கரன் தன்னுடைய புகாரில் கூறி இருந்தார்.

இதனையடுத்து கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திற்கு சென்ற போலீசார் மனோஜ், நிவேதாவை மீட்டுள்ளனர். அவர்களை ஜெயமங்கலம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*