Home » சினிமா » ‘திமிர் பிடிச்சவன்’ படத்திற்காக  சிலம்பம் கற்கும் விஜய் ஆண்டனி

‘திமிர் பிடிச்சவன்’ படத்திற்காக  சிலம்பம் கற்கும் விஜய் ஆண்டனி

எஸ்.எஸ்.ராஜமௌலியின் முன்னாள் உதவியாளர் கணேஷா இயக்கும் திமிர் பிடிச்சவன் படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக அவர் சிலம்பம் பயின்று வருகிறார்.
விஜய் ஆண்டனியின் இந்த முயற்சிகளை பற்றி இயக்குனர் கணேஷா கூறும்போது, விஜய் ஆண்டனி அர்ப்பணிப்பும், பர்ஃபெக்ஷனும் பாராட்டுக்குரியது. ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அதையும் தெளிவாகவும், சரியாகவும் செய்யக்கூடியவர்.

மேலும் இந்த படம் வழக்கமான போலீஸ் வெர்சஸ் வில்லன் கதையாக இல்லாமல், மைண்ட் கேம் கூறுகளை உள்ளடக்கி, அதில் பயணிக்கும் படம். சமகால இளைஞர்களின் நோக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் படமாக இருக்கும் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*