Home » சினிமா » வரவேற்பை பெற்ற காவியன்’ பட போஸ்டர்

வரவேற்பை பெற்ற காவியன்’ பட போஸ்டர்

ஷாம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் காவியன். இதில் நாயகிகளாக ஸ்ரீதேவி குமார், ஆத்மியா நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
சபரீஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்த்தசாரதி இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் அமெரிக்காவின் சூதாட்ட நகரம் என்றழைக்கப்படும் லாஸ் வேகாஸில் படமாக்கப்படவுள்ளது. லாஸ் வேகாஸில் படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் இதுவேயாகும். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஷாம் முகத்தின் ஒரு பக்கத்தில் நாளிதழில் வந்த அவரது உருவப்படமும் மற்றொரு புறம் ஷாமின் முகமும் இடம் பெறும் வகையில் வடிவமைக்க ப்பட்டுள்ளது. இது இணையத்தில் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*