Home » சினிமா » தலயுடன் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தலயுடன் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

சிறுத்தை சிவா இயக்கும் அடுத்த படமான விசுவாசத்தில் தல க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்த படத்தில் அஜித் இணைகிறார். இந்த படத்திற்கு விசுவாசம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வந்தது. முதலில் இந்த படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக வதந்திகள் வந்தன. பின்னர் விக்ரம் வேதா பட நாயகி ஷரதா ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இதுகுறித்து நேற்று விசுவாசம் படத்தை தயாரிக்கும் சத்ய ஜோதி பிலிம்ஸ் பதிவிட்ட டுவிட்டர் பதிவில் இந்த படத்தின் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. முன்னரே பில்லா, ஏகன், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ளார். 4வது முறையாக அவருடன் இணைந்து நடிக்க உள்ளார். இதே போல அஜித்-சிவா கூட்டணியின் 4வது படமாகும்.
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து நயன்தாரா மற்றும் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*