Home » குற்றம் » நகைப்பட்டறையில் ரூ.4 லட்சம் கொள்ளை

நகைப்பட்டறையில் ரூ.4 லட்சம் கொள்ளை

சென்னை,பிப்.6: சென்னையில் நகை பட்டறை பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் பணம், ஒரு கிலோ வெள்ளி கட்டி ஆகியவற்றை வெள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூக்கடை சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர் அபாஷா (வயது 42). இவர் சௌகார் பேட்டையில் நகைப்பட்டறை வைத்துள்ளார். நேற்றிரவு வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலையில் வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது ரூ.4 லட்சம் பணத்தைகாணவில்லை. மேலும் ஒருகிலோ வெள்ளி கட்டிகளையும் காணவில்லை. நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்து இவற்றை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து பூக்கடை போலீசில் அபாஷா புகார் செய்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வு செய்தனர். உடைக்கப்பட்ட பூட்டு, நகை பட்டறையின் உள் வளாகம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் இன்று காலை பூக்கடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*