Home » குற்றம் » கொள்ளையன் நாதுராமிடம் 2.5 கிலோ நகை மீட்பு

கொள்ளையன் நாதுராமிடம் 2.5 கிலோ நகை மீட்பு

சென்னை, பிப்.6: கொளத்தூர் நகைக்கடை கொள்ளையன் நாதுராமிடம் இருந்து இதுவரை 2.5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடையில் கொள்ளையடித்த பிறகு நாதுராம் கால்டாக்சியில் பெங்களூர் வரை சென்றுள்ளான். அங்கு நகைகளை விற்றதை போலீசார் கண்டுபிடித்து 1 கிலோ நகை மீட்கப்பட்டது.

இதனிடையே நாதுராமின் போலீஸ் காவல் இன்று முடிவடைகிறது. இதையடுத்து அவன் சிறையில் அடைக்கப்பட உள்ளான். நகைகளை வாங்கிய நகை வியாபாரிகள் பற்றிய தகவலையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*