Home » உலகம் » பெண் மேடைக்கலைஞர் சுட்டுக்கொலை

பெண் மேடைக்கலைஞர் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்,பிப்.5:பாகிஸ்தானில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்த பெண் மேடைக்கலைஞரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

பாகிஸ்தானில் மிகவும் பிரபலமான மேடைக்கலைஞராக விளங்குபவர் சும்புல் கான் . கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வசிக்கும் இவரை அணுகிய 3 பேர், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், சும்புல் கான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் சும்புல் கானில் வீட்டை சூறையாடியதுடன், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண் மேடைக்கலைஞரை சுட்டுக்கொன்ற நபர்களை தேடி வருவதாக கூறியுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*