Home » சினிமா » களவாணி-2 படத்தில் ஓவியா நடிக்கிறாரா?

களவாணி-2 படத்தில் ஓவியா நடிக்கிறாரா?

கடந்த 2010-ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘களவாணி’ திரைப்படம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் களவாணி-2 படத்தை எடுக்க தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடையே கடும் போட்டி நிலவுகிறது. கே-2 என்ற பெயரில் சற்குணம் இயக்கும் படத்தில் விமல், ஓவியா நடிக்க உள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் களவாணி படத்தை தயாரித்த நசீரின் ஷெராலி பிலிம்ஸ் நிறுவனம் களவாணி-2 படத்தை தாங்களே தயாரிகக்க உள்ளதாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற களவாணி படத்தின் 2-ம் பாகத்தை தயாரிப்பதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் யார் படத்தை எடுக்கப்போகிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நாங்கள் முறையாக பெயரை பதிவு செய்துள்ளோம் என தயாரிப்பாளர் நசீரின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*