w
Home » குற்றம் » சென்னை போலீஸ்காரர் சிக்கிய விவகாரம் கள்ளத்துப்பாக்கி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை போலீஸ்காரர் சிக்கிய விவகாரம் கள்ளத்துப்பாக்கி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

திருச்சி, பிப்.5: கள்ளத்துப்பாக்கி வழக்கில் பல்வேறு அதிரடியான திருப்பங்கள் ஏற்பட்டு வருவதால் அது குறித்து விரிவான விசாரணை நடத்திட அது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 27-ந்தேதி சென்னை வேப்பேரியில் 6 பிஸ்டலுடன் 2 பேர் கைதான நிலையில், திருச்சி பிரபல தங்கும் விடுதியில் கள்ளத்துப்பாக்கிகளுடன் சென்னை போலீஸ்காரர் பரமேஸ்வரன் மற்றும் உடனிருந்த இரண்டு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து கள்ளத்துப்பாக்கிகள், 10 ரவுண்ட் தோட்டாக்கள் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்ட்டுள்ள வில்லிவாக்கம் நம்மாழ்வர்பேட்டையில் உள்ள நாகராஜ் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி போலீசாருடன் சென்று விசாரணை நடத்தினார்.

அதில் நாகராஜ் தாய் குப்பு (வயது 48) அளித்த தகவலின் பேரில் அவரது தங்கை நாகலெட்சுமி வசிக்கும் அயனாவரத்தில்
சோதனை செய்தனர். அப்போயது ரூ 64 ஆயிரம் கள்ள நோட்டுகள் சிக்கின. இது தொடர்பாக இரண்டு பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கட்ட விசாரணை யில் அவர்கள் சென்னை, கோவை, நெல்லை, கேரளா போன்ற இடங்களுக்கு ஒரே நம்பரில் அடிக்கடி பேசியுள்ளார். அவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் தொழிலதிபர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இடையே பரமேஸ்வரன் செல்போனில் ஒரு நம்பரை தொடர்பு கொண்டபோது திருச்சி மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி ஒருவர் எடுத்து பேசியுள்ளார். இப்படி இதில் பலருக்கும் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே போல மேற்குவங்கத்தில் இருந்து 5 கள்ளத்தூப்பாக்கிகள் கடத்தப்பட்ட வழக்கும் ஏற்கவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசார ணை நடைபெற்று வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*