Home » Flash News » ரூ.1 கோடி போதை பொருள் பறிமுதல்

ரூ.1 கோடி போதை பொருள் பறிமுதல்

திருச்சி, ஜன.31: திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து இன்று காலை கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் பிடிபட்டார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை மலேசியாவில் இருந்து திருச்சி வரும் மலிண்டோ விமானத்தில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மதுரையில் இருந்து அதிகாரிகள் குழுவினர் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வந்தனர். விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகள் உடைமைகளை  சோதனை செய்தனர்.

அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த அஜிம் நாகூர் கான் என்ற வாலிபர் பைகளில் ஏராளமான டிபன் பாக்ஸ்களை கொண்டு வந்திருந்தார். அவற்றை திறந்து பார்த்த போது அதில் தடை செய்யப்பட்ட பயங்கர போதை பவுடர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அஜிம் நாகூர் கானை போலீ சார் கைது செய்தனர். அவரிடமிருந்து 11 கிலோ போதை பொருள் அடங்கிய டிபன் பாக்ஸ் பாத்திரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அஜிம் நாகூர்கானிடம் கைப்பற்றப்பட்ட போதை பொருள் சந்தை மதிப்பில் ரூ.1 கோடி வரை விலை போகும் கூறப்படுகிறது.

மலேசியாவில் இருந்து அஜிம் நாகூர் கானிடம் போதை பொருள் கொடுத்தனுப்பிய ஆசாமி யார்? திருச்சியில் யார் மூலம் போதை பொருள் வெளி சந்தையில் விற்கப்படுகிறது. இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் யார்? என அதிகாரிகள் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*