Home » Flash News » அதிகாரிகளுடன் ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

அதிகாரிகளுடன் ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

சென்னை, ஜன.31: சென்னை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளை இணைப்பது, மற்றும் அடுத்த மாதத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் ஆகியவை குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சென்னை மாவட்டத்துடன் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளை இணைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள், மற்றும் அடுத்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட், மானிய கோரிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.மேலும் சிஎம்டிஏ சார்பில் நடத்தப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளை விரைவில் நிறைவு  செய்வது குறித்தும் அதிகாரிகளுக்கு ஓபிஎஸ் அறிவுரைகளை வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்தும், விரிவான தகவல்கள் கேட்டுப் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இது தவிர, ஒன்றிரெண்டு மாதங்களில் நடைபெறுவதாக இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு வரையறை உள்ளிட்ட பிற விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அரசு வட்டாரம் கூறுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*