Home » சினிமா » மதுர வீரன் ஜல்லிக்கட்டு படமா? முத்தையா பேட்டி

மதுர வீரன் ஜல்லிக்கட்டு படமா? முத்தையா பேட்டி

விஜய்காந்த் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக நடித்து வரும் 2-ம் தேதி வெளியாக உள்ள மதுர வீரன் படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான முத்தையா இயக்கி உள்ளார். இயக்குனராக தனது முதல்பட அனுபவம் குறித்து முத்தையா முத்தையா கூறியதாவது:- நான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன்.

முதலில் ஒரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்கையில் இருந்து எடுத்தால் சரியாக இருக்கும் என்பதால் தான் ‘மதுரவீரன்’ கதை உருவானது. இப்படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளது. இப்படத்தின் ஹீரோ மதுரையை பின்புலமாக கொண்டவனாகவும், வயது 20 அல்லது 23 வயதை கொண்டவன் போலவும் ஒரு சபையில் 100 , 1000 பேர்கள் முன்பு எழுந்து குரல் கொடுக்கும்போதும் மற்ற அனைவரும் அமைதியாக அவன் பேசுவதை கேட்க வேண்டும் அப்படி ஒருத்தனாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் சண்முக பாண்டியனை தேர்வு செய்தோம். படத்தில் ஹீரோயின் காட்சிகள் மிகவும் குறைவாகத்தான் உள்ளது எனவே புதுமுகமாக இருந்தால் போதுமானதாக இருக்கும் என்று மீனாட்சியை தேர்வு செய்தோம். படத்தில் சமுத்திரகனி கேரக்டர் பெயர் ரத்னவேலு.
அவர் தான் மதுர வீரன் கதாபாத்திரம். ரத்னவேலு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க 3 நடிகர்களை நான் எண்ணி இருந்தேன் முதலாவதாக ராஜ்கிரண், இரண்டவதாக சத்யராஜ் , மூன்றாவதாக தான் சமுத்திரகனி படத்தின் ஹீரோவின் வயதை வைத்து ரத்னவேலு கதாபாத்திரம் முடிவு செய்து அவரை தேர்வு செய்தோம். படத்திற்கு சந்தோஷ் தயாநிதி மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். இதில் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றிய
சிறிய தொகுப்பு உள்ளது என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*