Home » சினிமா » ‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு ஜோடி நயன்தாரா

‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு ஜோடி நயன்தாரா

சென்னை, ஜன.30: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  ஷங்கர் இயக்கத்தில் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் கமல் நடித்து 1996-ல் வெளிவந்த இந்தியன் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுத்த இந்தியன் தாத்தா இந்தியன் தாத்தா கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன்-2 படத்தை இயக்க ஷங்கர் முடிவெடுத்துள்ளார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள 2.0 (எந்திரன்-2) படத்தின் ஷýட்டிங் முடிந்து கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 27-ந் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. நடிகர் கமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு ஆகிய இரண்டு படங்களின் இறுதிகட்ட பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகிறார். இதன் பணிகளை முடித்துக்கொண்டு மே மாதம் முதல் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் முழுமையாக நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திலும் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தந்தை கதாபாத்திரம் ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. 90% அவர்தான் இதில் நடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் தைவான் நாட்டில் இந்தியன் 2 படத்தின் அறிமுக வேலையை ஷங்கர் தொடங்கி வைத்துள்ளார். இந்தியன் 2 என தமிழில் எழுதப்பட்ட பிரமாண்ட பலூன் அந்நாட்டில் பறக்கவிடப்பட்டது. அதை ஷங்கரும் தனது டுவிட்டர் செய்தியில் உறுதிப்படுத்தி உள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*