Home » Flash News » பக்தர்கள் நடைபயணமாக செல்லும் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது

பக்தர்கள் நடைபயணமாக செல்லும் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது

திருப்பதி, ஜன.30: திருப்பதி மலைப்பாதையில் பக்தர் கள் நடை பயணமாக செல்லும் வழியில் வெடிகுண்டு மூலப் பொருள் கிடந்ததை  போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தீவிரவாதிகள் சதியா என விசாரணை நடந்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை வழியாகவும் சென்று வருகின்றனர். இதற்காக இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி மலைப்பாதை, மற்றொன்று ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை ஆகியவை ஆகும். இந்த இரு வழிகளில் பக்தர்கள் நடைபயணமாக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.  இந்த பாதைகளில் பக்தர்கள்பலகட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுப்பப் படுகின்றனர்.

கோயிலை சுற்றி குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் விமானங்கள் பறக்கவும் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரும் இங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்றிரவு திருப்பதியின் ஸ்ரீவாரி மெட்டு மலையடிவாரத்தில் ஒரு சில பகுதிகளில் செம்மரக்கட்டைகள் கடத்தல் தடுப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. அதில் ஸ்ரீரங்கம் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. போலீசார் அதிர்ச்சி அந்த பையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும், எலக்ட்ரானிக் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது. இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அதில் கேரள மாநிலத்தின் நகைக் கடைக்குச் சொந்தமான நகை பெட்டியும் இருந்தது. இதனால் கேரள மாநிலத்தவரின் கைவரிசையாக இருக்குமோ என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.  இது தீவிரவாத செயலா அல்லது வேறு அசம்பாவித செயலுக்கான ஏற்பாடா என்றும் போலீசார் தீவிர  விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மலைப் பாதையில் வேறு எங்கும் வெடிபொருட்கள் வைக்கப் பட்டுள்ளதா என்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*