Home » Flash News » ஐஎஸ்ஐ தொடர்பா?

ஐஎஸ்ஐ தொடர்பா?

சென்னை, ஜன.30: கொல்கத்தாவில் இருந்து கள்ளத் துப்பாக்கி மற்றும் கள்ள நோட்டுகள் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தொடர்பு இருக்கலாம் என்று தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கவுகாத்தியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயிலில் கடந்த 26-ந் தேதி சென்னையை
சேர்ந்த கமல், திலீப் ஆகிய இரண்டு வாலிபர்கள் திருவொற்றியூரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஐந்து நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டரை லட்சம் ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுக்கள், இரண்டு லட்சம் மதிப்புள்ள கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதி ரபீக் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே ஹமீது என்பவர் மூலம் 2 முறை 11 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை ரபீக் கடத்தி வர செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட சதி செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சம்மந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கமல், பிரதீப் ஆகியோர் கள்ள நோட்டு கடத்தல் பின்னணியில் ஐஎஸ்ஐ இருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இதற்கு வாய்ப்பு இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐஎஸ்ஐ ஆதரவுடன் கள்ள நோட்டு தயாரிக்கும் ஆலை பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் மற்றும் கராச்சியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புதிய இரண்டாயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகளை இந்த அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு பெருமளவில் இந்தியாவுக்கு கடந்த மே மாதம் முதல் அனுப்பப்பட்டு வந்துள்ளது. இது வெளியுலகத்திற்கு அம்பலமானதை தொடர்ந்து கள்ள நோட்டு புழக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது மீண்டும் கள்ளநோட்டுகளை இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிகிறது. ஐஎஸ்ஐ உதவியுடன் இக்பால் கானா, தாவூத் இப்ராகிமின் உதவியாளர் அப்தாப் பட்கி ஆகியோர் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதன் பின்னணியில் இருந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சீனா-நேபால் வழியாக இந்தியா வரும் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல பங்களாதேஷ்-மால்டா வழித்தடத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*