Home » உலகம் » இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி

இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி

பிரேசில்லா, ஜன.28:பிரேசில் நாட்டில் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். ஃபோர்டாலஸா என்ற இடத்தில் உள்ள விடுதிக்கு 3 கார்களில் வந்த மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் இரவு விடுதியில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இந்தத் தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்தனர். இரண்டு போதைக்கடத்தல் கும்பல்களுக்கு இடையே இந்த மோதல் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*