Home » அரசியல் » ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அதிரடி நடவடிக்கை

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அதிரடி நடவடிக்கை

சென்னை, ஜன.28: ஆர்கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் களையெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது வரை 2000-க்கும் மேற்பட்ட சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வரும் நிலையில் இன்று நெல்லை மாவட்ட மாநகர் அதிமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களை கட்சியில் இருந்து நீக்கும் பணியை அதிமுக தலைமை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நீக்கி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நெல்லை மாநகரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.நீக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:-
மு. அண்ணாமலை, (முன்னாள் எம்.எல்.ஏ.,), முத்துகுமார்,( தென்காசி நகரக் செயலாளர்), கலாபத்மபாலா, (பொதுக்குழு உறுப்பினர், ஆலங்குளம் தொகுதி), இசக்கி சுப்பையா, ( முன்னாள் அமைச்சர் ), மைக்கேல் ராயப்பன், (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ), நடராஜன், ( கீழப்பாவூர் ஒன்றியக் செயலாளர் ), ராமசுப்பிரமணியன், ( பாளையங்கோட்டை ஒன்றியக் செயலாளர் ), செந்தூர் பாண்டியன்,
( சுரண்டை பேரூராட்சிக் செயலாளர்), வளன் அரசு,, ( ஏர்வாடி பேரூராட்சிக் செயலாளர்), பாஸ்கர், ( கீழப்பாவூர் பேரூராட்சிக் செயலாளர் ), தங்கவேல், ( கோபாலசமுத்திரம் பேரூராட்சிக் செயலாளர் ), பண்டாரம்,, ( சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சிக் செயலாளர் ) உட்பட தென்காசி, ஆலங்குளம், ராதாபுரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், சுரண்டை, களக்காடு, சேரன்மகாதேவி உள்ளிட்ட நெல்லை மாநகர் பகுதி அதிமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வரும் நிலையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நாளை முதல் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*