Home » அரசியல் » திட்டமிட்டபடி நாளை சாலை மறியல் : மு.க.ஸ்டாலின்

திட்டமிட்டபடி நாளை சாலை மறியல் : மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜன.28: பேருந்து கட்டண உயர்வு முழுமையாக திரும்ப பெறக்கோரி வலியுறுத்தி நாளை திட்டமிடப்படி சாலை மறியல் போராட்டம் நடத்த ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு குறைந்துள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டு, பெயரளவுக்கு மட்டும் தற்போது கட்டணத்தை குறைத்து, கண் துடைப்பு வேளையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

உயர்த்தி கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திட்டமிட்டபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு பிறகு அரசின் நிலைப்பாட்டை கவனித்து அதன் பின்னர் மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*