Home » Flash News » டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

புது டெல்லி, ஜன. 28:தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி தொன்னாப்பிரிக்கா விற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 2ல் போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை நழுவவிட்டது. இந்நிலையில் இன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேப்டன் கோலி தலைமையிலான அணியில் ரோஹித் சர்மா, ஷிக்கர் தவான், கே எல் ராகுல், சுரேஷ் ரெய்னா, தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே, அக்சர் படேல், சாஹல், குல்திப் யாதவ், புவனேஷ்வர், ஜஸ்பிரித் பும்ரா, ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தகூர்
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*