Home » விளையாட்டு » சீனியர்களை அள்ளிய சென்னை அணி

சீனியர்களை அள்ளிய சென்னை அணி

பெங்களூரு, ஜன. 28:  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் சீனியர் வீரர்களை எடுத்துள்ளது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. சென்னை அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா தக்க வைக்கப்பட்ட நிலையில் மற்ற வீரர்களுக்கான ஏலத்தில் சென்னை அணி பங்கேற்றது.

சென்னை அணிக்காக, இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், பிராவோ, டுபிளிசிஸ், கேதர் ஜாதவ், சுரேஷ் ரெய்னா, ராயுடு, கரன் சர்மா உள்ளிட்டோர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். சென்னை அணியில் தோனி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் 30 வயதை கடந்தவர்கள். குறிப்பாக இம்ரான் தஹிர்க்கு 38 வயது. ஹர்பஜன் சிங் (37), தோனி (36) வாட்சன் (36). மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் வீரர் அஸ்வின் எடுக்கப்படவில்லை.

அணி முழுக்க சீனியர் வீரர்கள் இருந்தாலும் ஐபிஎல் என்பது இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் களம் என்றும் இதில் வெறும் வெற்றிக்காக சீனியர்களை ஏலம் எடுத்திருப்பது ஏமாற்றம் அளித்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் சென்னை அணிக்கு மற்றொரு பக்கம் ஆதரவும் அதிகரித்து வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*