Home » Flash News » இலங்கை கடற்படை அட்டூழியம்

இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம், ஜன.28:ராமேஸ்வரத்தில் இருந்து 2 படகுகளுடன் மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தலைமன்னாருக்கு அழைத்து சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். படகின் அளவுக்கு ஏற்ப ரூ.17 கோடி வரை அபராதம் விதிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசை படகுகளில் 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடிக்கப்பட்டனர்.

மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் 2 விசைப்படகுகள் மற்றும் 12 மீனவர்களை சிறைப்பிடித்துள்ளனர். சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து தலைமன்னார் முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின் மீனவர்கள் 12 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருக்கின்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் இலங்கை அரசு புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் எல்லை தாண்டி வரக்குடிய படகுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து 17 கோடிவரை அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறைப்பிடிக்கக்குடிய படகு உரிமையார் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராகும் படியும் சட்டத்தில் தெரிவித்துள்ளனர். தற்போது சிறைப்படிக்கப்பட்ட மீனவர்களின் நிலை என்னவென்று தெரியத நிலையில் படகு உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*