Home » Flash News » ரூ.11 கோடிக்கு ஏலம் போன கிரிக்கெட் வீரர்

ரூ.11 கோடிக்கு ஏலம் போன கிரிக்கெட் வீரர்

சென்னை, ஜன. 28:இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தின் இரண்டாவது நாளில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

ஜெயதேவ் உனத்கட்டை ராஜஸ்தான் அணி ரூ. 11.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதிக விலைக்கு ஏலம் போன வீரர்களில் இரண்டாவது இடத்தை இவர் பிடித்தார்.

இந்தியன் பிரீமியர் லீக் 2018க்கான ஏலம் நேற்று தொடங்கி 2வது நாளாக இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் நாள் வீரர்கள் ஏலத்தில் 78 இந்திய வீரர்களும் 29 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக ரூ. 321 கோடியே 10 லட்சத்துக்கு 8 அணிகள் வாங்கின.

இன்று நடந்த ஏலத்தில் 19 வயதாகும் ஷிவம் மவி ரூ.3 கோடிக்கு கொல்கத்தா அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்சச்சின் பேபி ரூ.20 லட்சத்திற்கு ஐதராபாத் அணிக்கும், மன்ஜோத் கல்ரா ரூ.20 லட்சத்திற்கு டெல்லி அணிக்கும், அங்கிட் ஷர்மா ரூ.20 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணிக்கும் ஏலம் போயினர்

நாதன் லியான், ஃபாவத் அகமது, பிரக்யான் ஓஜா, டம்ரைஸ் ஷம்சி, அன்மோல்பிரீத் சிங் ஏலம் போகவில்லை அபூர்வ் வாங்கடே ரூ.20 லட்சத்திற்கும், ரிங்கு சிங் ரூ.80 லட்சத்திற்கும் கொல்கத்தா அணிக்கு ஏலம் போயினர்

முஜீப் ஸத்ரன் ரூ.4 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது; 16 வயதாகும் இவர், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்.ஷர்துல் தாகூர் ரூ.2.60 கோடிக்கு சென்னை அணிக்கு ஏலம் போனார்.

ஜெய்தேவ் உனத்கட் ரூ.11.50 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்கு ஏலம் போனார். இவரது அடிப்படை விலை ரூ1.5 கோடியாக இருந்தது. அதிகபட்ச ஏலம் எடுக்கப்பட்ட நபர்களில் ஜெய்தேவ் 2வது இடத்தில் உள்ளார். நாதன் கோல்டர் ரூ.2.20 கோடிக்கு பெங்களூரு அணிக்கும், டிரெண்ட் பௌல்ட் ரூ.2.20 கோடிக்கு டெல்லி அணிக்கும் ஏலம் போயினர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*