w
Home » Flash News » கள்ள நோட்டு பதுக்கிய 2 பெண்கள் கைது

கள்ள நோட்டு பதுக்கிய 2 பெண்கள் கைது

சென்னை, ஜன.28:தூப்பாக்கி கடத்தில் முக்கிய குற்றவாளி தலைமறைவாக இருப்பதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று மேற்குவங்கத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 5 நாட்டு துப்பாக்கிகளுடன் சென்னையை சேர்ந்த கமல், பிரதீப் ஆகிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து துப்பாக்கி தோட்டாக்கள், பணம் மற்றும் போதைப் பொருள் ஆகியவை சிக்கின. மேற்குவங்க மாநிலத்திலிருந்து ரெயில் மூலம் துப்பாக்கிகள் கடத்தி வரப்படுவதாக வேப்பேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் வீரக்குமார் கிடைத்த ரகசிய தகலின் அடிப்படையில் இருவரையும் கைது விரட்டிப்பிடித்து கைது செய்தார்.

அவர்களை பிடித்து சோதனையிட்டதில் 5 நாட்டு துப்பாக்கிகள் சிக்கின. மேலும் 20 தோட்டாக்கள், இரண்டரை லட்சம் பணம் மேலும் 2 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்கள் சிக்கின. மற்றும் ரூ 2000 கள்ளநோட்டுகளும் சிக்கின. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஒருவர் பெரம்பூரைச் சேர்ந்த கமல் (வயது 25) என்றும், மற்றொருவர் திருமங்கலத்தைசேர்ந்த பிரதீப் (வயது 26)என்றும் தெரியவந்தது.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். இவர்கள் பின்னணியில் முக்கிய நபர் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் சொல்லியபடி தான் இவர்கள் இதனை செய்துள்ளனர்.

இவர்கள் மேற்கு வங்கம் மல்டா பகுதியில் இருந்து தூப்பாக்கியை வாங்கி வந்துள்ளனர். இவர்களுக்கு தலைவனாக செயல்பட்ட முக்கிய நபர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் தான் இவர்களுக்கு பணம் கொடுத்து தூப்பாக்கி, கள்ளநோட்டுகள், மற்றும் போதைப்பொருட்களை கடத்தி வர செய்து உள்ளார்.
இது வரை மூன்று முறைக்கு மேல் தூப்பாக்கிகளை கடத்தி வந்து இவர்கள் கொடுத்து உள்ளதாக தெரிகிறது. தலைமறைவாக உள்ள அந்த நபரை பிடித்தால் தான் இதில் உள்ள பின்னணியை கண்டறியமுடியும் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் கமலில் வீட்டில் சோதனை செய்தபோது நேற்று மேலும் ஒரு தூப்பாக்கி சிக்கியுள்ளது. இது போலீசாரை அதிர்ச்சியடை வைத்துள்ளது. அதனால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*