Home » Uncategorized » வைகோ, முத்தரசன் உள்பட 250 பேர் கைது

வைகோ, முத்தரசன் உள்பட 250 பேர் கைது

திருவாரூர், ஜன.28: காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி டெல்டா மாவட்டங்களில் இன்று விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் திருச்சி மெயில் ரெயிலை தடுத்து நிறுத்திய வைகோ, முத்தரசன் மற்றும் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போதிய நீர் இல்லாத காரணத்தால் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை என்று காரணம் சொல்லி வருகிறது.

இதனை கண்டித்தும் காவிரி பிரச்சனையில் உரிய தீர்வு காண வேண்டும் என்றும் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மற்றும் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் திருவாரூர் அடுத்துள்ள கொரடாச்சேரியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வந்த திருச்சி மெயிலை நிறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் 1 மணி நேரத்துக்கு மேல் ரெயில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து போலீசார் முத்தரசன், வைகோ மற்றும் போராட்டத்தில் 250 பேரை கைது செய்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*