Home » உலகம் » பச்சிளம் குழந்தை உடலில் வெடிபொருள்

பச்சிளம் குழந்தை உடலில் வெடிபொருள்

காபூல், ஜன.27: ஆப்கானிஸ்தானில் 4 மாதமே ஆன ஒரு பச்சிளம் குழந்தையின் உடலில் வெடி பொருள் சுற்றியிருப்பதை பார்த்த பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர். காபூலில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள குந்தூஸ் என்ற இடத்தில் தாக்குதல் நடத்தவதற்காக தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தனர். பாதுகாப்பு படையினரின் சோதனையில் இருந்து தப்புவதற்காக அந்த குழந்தையின் ஆடையில் வெடி பொருளை மறைத்து எடுத்துச் செல்ல முயன்றனர்.
பாதுகாப்பு படையினர் சரியான நேரத்தில் இதனை கண்டுபிடித்து வெடிபொருளை அகற்றினர்.
தலிபான் தீவிரவாதிகளின் இந்த கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*