Home » Flash News » விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்: ஓபிஎஸ்

விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்: ஓபிஎஸ்

சென்னை, ஜன.27: விவசாயத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் ஈடுபடவேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் நடைபெற்ற விவசாய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியா ஒரு விவசாய நாடு. விஞ்ஞானி சுவாமிநாதன் போன்றவர்கள் பசுமை புரட்சிக்கு வித்திட்டார்கள். இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்.

பஸ் கட்டண உயர்வுக்கு ஏற்கனவே அரசு சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் குறைவு. ஸ்டாலின் திட்டமிட்டு போராட்டத்தை நடத்தி வருகிறார்.
டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது அதனை சரி செய்ய வேண்டும். 7 ஆண்டுக்கு பிறகு தான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ் தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த வேண்டியது ஒவ்வொரு தனிமனிதரின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*