Home » Flash News » இந்தியாவில் முதலீடு செய்ய மோடி அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்ய மோடி அழைப்பு

டாவோஸ், ஜன.23: இந்தியா என்றாலே வர்த்தகம் என்பதை புரிந்து கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் என்று டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் சர்வதேச தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். இன்று பிற்பகலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 130 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் மோடி முக்கிய உரையாற்றுகிறார்.

சுவிஸ் நாட்டில் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் அங்கு
சென்றுள்ளார். 48 ஆண்டுகால இந்திய வரலாற்றில் இத்தகைய பொருளாதார மாநாட்டில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதன் முறையாகும். இந்திய நேரப்படி மாலை 3.30 மணி அளவில் பிரதமர் மோடி ஆற்ற இருக்கும் உரை முக்கியவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 130 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தொழிலதிபர்கள் மற்றும் வங்கி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதற்கு முன்னதாக உலகளாவிய தொழில்நிறுவனங்களை சேர்ந்த முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி கலந்துரையாடினார். அப்போது தொழிலதிபர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மோடி பதிலளித்தார். அவர் கூறுகையில், இந்தியா என்றாலே வர்த்தகம் என்று அர்த்தம். தொழில்
தொடங்குவதற்கான அற்புதமான வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. இதை புரிந்து கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அவர் அழைப்பு விடுத்தார். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மோடி விளக்கினார்.

சர்வதேச நிதி ஆணையத்தின் அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் காலத்தில் 7.4 சதவீதத்தை எட்டி விடும் என்றும். இது சீனாவின் வளர்ச்சி விகிதத்தை விட அதிகம் என்று சுட்டிக்காட்டப்பட்டு இருப்பதையும் பிரதமர் மோடி எடுத்துக்கூறினார்.

இந்த கலந்துரையாடலில் 18 நாடுகளை சேர்ந்த 40 பெரும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். மைக்ரோ சாப்டின் முதன்மை செயல் அதிகாரி சத்ய நாதல்லா, இந்தியாவின் சார்பில் ரிலையன்ஸ் அதிபார் முகேஷ் அம்பானி, ஏர் பஸ் செயல் இயக்குனர் ரிக் கோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக சுவிஸ் அதிபர் அலைன் பெர்சட்டுடன் மோடி இருதரப்பு ஆலோசனை நடத்தினார். உற்பத்தி துறையில் இரு நாடுகளும் கூட்டாக பங்கேற்பது மற்றும் வரித் தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோ
சிக்கப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*