Home » உலகம் » சீனாவில் 9 வயது பாசமலர் அண்ணனை பள்ளிக்கு தூக்கிச் செல்லும் சிறுமி

சீனாவில் 9 வயது பாசமலர் அண்ணனை பள்ளிக்கு தூக்கிச் செல்லும் சிறுமி

பீஜிங், ஜன.22: சீனாவில் மாற்றுத்திறனாளியான 12 வயது அண்ணனை தினமும் 9 வயது தங்கை பள்ளிக்கு தூக்கிச் செல்லும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவை சேர்ந்த 9 வயது சிறுமி டிங்ஸ்வாங். இவரது அண்ணன் டிங்ஃபுக்கு வயது 12. இந்த சிறுவனால் கை, கால்களை சுயமாக பயன்படுத்த முடியாது.

இந்நிலையில் அவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து டிங்ஸ்வாங் தனது அண்ணனை வெயில், மழை, பனி என எதையும் பொருட்படுத்தாமல் தினந்தோறும் பள்ளிக்கு முதுகில் சுமந்து சென்று மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

அவர்களது பெற்றோர் இருவரும் மாற்றுத் திறனாளிகள் என்பதால் சமையல், சகோதரனுக்கு கை, கால்களை சுத்தம் செய்து, வீட்டுப்பாடம் எழுத வைப்பது என அனைத்து வேலைகளையும் அந்த 9 வயதே ஆன சிறுமி செய்து வருகிறார்.
அண்ணன் படிக்காமல் இருக்கும்போது தாம் மட்டும் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என மறுத்த அச்சிறுமி, தாமே அண்ணனையும் பள்ளிக்கு சுமந்து செல்வதாகக் கூறி பெற்றோரிடம் அனுமதி பெற்றுள்ளார்.

மேலும், தாம் இருக்கும் வரை தமது அண்ணனை விட்டுவிடப் போவதில்லை என்றும், வாழ்நாள் முழுவதும் தாம் தான் அண்ணனுக்கு ஊன்றுகோல் என்றும் தாயுள்ளம் கொண்ட அச்சிறுமி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை அவர்கள் இருவரம் எந்த வகுப்பிற்கும் தாமதமாக சென்றதே இல்லையாம். இவர்களை பார்த்த பள்ளி நிர்வாகம் கட்டணம் எதுவும் வாங்காமல் கல்வியளித்து வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*