Home » Flash News » இஸ்ரோ மகத்தான சாதனை: பிரதமர் பாராட்டு

இஸ்ரோ மகத்தான சாதனை: பிரதமர் பாராட்டு

ஸ்ரீஹரிகோட்டா, ஜன. 12: இந்தியாவின் 100வது செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி சி-40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  கார்ட்டோ சாட் செயற்கைகோள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சொந்தமான 30 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்தது.  இதில் 710 கிலோ எடைகொண்ட கார்ட்டோ  சாட் -2 செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தியது.  இது இஸ்ரோ அனுப்பும் 100வது செயற்கைகோளாகும். தகவல் தொடர்பு, போக்குவரத்து போன்றவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  பூமியை துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது இந்த கார்ட்டோ சாட் -2 செயற்கை கோள் ஆகும்.

வெளிநாட்டைச்சேர்ந்த 28 செயற்கை கோள்கள் உட்பட மொத்தம் 31 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. 28 செயற்கைகோள்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பின்லாந்து, கொரியா, பிரான்சு ஆகிய நாடுகளை சேர்ந்தவை ஆகும்.
2.21 மணி நேரத்தில் 505 கி.மீட்டர் உயரத்தில் புவி வட்ட பாதையில் கார்ட்டோ சாட் -2 செயற்கை கோள் நிலைநிறுத்தப்படும். கார்ட்டோ சாட் -2 செயற்கை கோளின் எடை 710 கிலோ ஆகும். இந்த செயற்கை கோள் இயற்கை வள ஆராய்ச்சிக்கு உதவும். மொத்தம் 1,323 கிலோ எடையுள்ள 31 செயற்கைக்கோள்களுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
பிரதமர் வாழ்த்து:

சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியான் மூலம் இஸ்ரோவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், பிஎஸ்எல்வி-சி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றியின் மூலம் புத்தாண்டில் விண்வெளி ஆய்வின் பயன்கள் நமது குடிமக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோருக்கு சென்றடையட்டும். இஸ்ரோவின் 100வது செயற்கைகோள் ஏவப்பட்டது, நமது புகழுக்கும் சாதனைக்கும், இந்தியாவின் எதிர்கால விண்வெளி ஆய்வு திட்ட பணிகளுக்கும் முக்கியத்துவமாக அமைந்துள்ளது. நமது வெற்றியில், மற்ற நாடுகளுக்கும் பயன் கிடைத்துள்ளது 6 நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைகோள்கள் உட்பட 31 செயற்கைகோள்கள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*