Home » Flash News » விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்

சென்னை, ஜன.12: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டசபையில் கவர்னர் உரையின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி பேசினார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வார்டுகளை பிரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை காமராஜர்  சாலையில் நினைவு வளைவு அமைக்கப்படும். கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதி அருகே நினைவு மண்டபம் அமைக்கப்படும். அவருடைய வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் அவர் வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*