Home » Flash News » ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

சென்னை, ஜன.12: சென்னை விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ. 1.60லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போதை தடுப்பு போலீசார் பறிமுதல் செய்து ஆந்திராவை சேர்ந்த  ஆசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோன்று அம்பத்தூரில் 8 கிலோ போதை பொருட்கள் வைத்திருந்தவரும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஷார்ஜாவில் இருந்து இன்று காலை தனியார் விமானம் சென்னை வந்தது.அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பையில் 12 கிலோ கஞ்சா மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் அந்த ஆசாமியை போதைப்பொருள் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் ஆந்திராவைச்சேர்ந்தவர் என்பதும் அவர் விமானம் மூலம் ஷார்ஜா சென்று திரும்பி சென்னை வந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 12கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.1.60லட்சம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஆந்திராவைசேர்ந்த வாலிபர் சென்னையில் இருந்து ஷார்ஜா சென்று அங்கிருந்து  சென்னை திரும்பியுள்ளார். அவரிடம் ரூ. 1.60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா இருந்தது எப்படி என்பதும் கஞ்சா கடத்தலுக்கும் விமான நிலைய ஊழியர்களுக்கும் தொடர்புள்ளதா என்றும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர் இதேபோன்று அம்பத்தூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆனந்த்பாபு தலைமையில் போலீசார் எம்டிஎச் சாலையில் சோதனை நடத்தினர்.அப்போது 17 கிலோ குட்கா, மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் டீக்கடை உரிமையாளர் கொடியரசு (வயது 32) என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு  ரூ. 8 லட்சமாகும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*