Home » Flash News » ஸ்டிரைக் வாபஸ் ஆகுமா?

ஸ்டிரைக் வாபஸ் ஆகுமா?

சென்னை, ஜன.11: அரசு அறிவித்துள்ள 2.44 காரணி ஊதிய உயர்வை தற்காலிகமாக ஏற்க தொழிற்சங்கங்கள் சம்மதித்து உள்ளன. மேலும் பேச்சு நடத்த நடுவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதை அரசு ஏற்கும் பட்சத்தில் இன்று மாலை போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை எதிர்த்து,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வாராகி, பிரீதா, சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியத் தொகை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சானது இந்த வழக்குகளையும் சேர்த்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பொது மக்களின் நலன், பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, போக்குவரத்து தொழிற் சங்கங்கள் போராட்டம் தொடர்பாக, மனசாட்சியுடன் முடிவு எடுக்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிற் சங்கங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பிரகாஷ் , பிரசாத் ஆகியோர், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் ஒருவரை நியமிக்க வேண்டும் . 2.57 சதவீத ஊதிய உயர்வு தொடர்பாக, தொழிற் சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.  அப்போது வழக்கறிஞர் பிரகாஷ், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நேற்று நடைபெற்ற தொழில் சங்கங்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் கொண்ட மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் .அப்போது நீதிபதிகள், மனசாட்சி யுடன் முடிவெடுக்க கேட்டோம், ஏதாவது பதில் உண்டா? என்று தொழிற்சங்கங்களிடம் கேள்வி கேட்டனர் .

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தொழிற் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக அரசின் விளக்கத்தை கேட்டுதான் தெரிவிக்க வேண்டும் என்றார் .  இதையடுத்து, வழக்கு விசார ணையை பிற்பகலுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இது குறித்து சிஐடியூ தலைவர் சவுந் தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வை தற்காலிகமாக ஏற்க சம்மதிக்கிறோம். நாங்கள் கூடுதலாக கேட்கும் 0.13 காரணி உயர்வு அளிப்பது குறித்து பேச்சு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். போராட்டக் காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளையும்  நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறோம்.

இதற்கான பதிலை அரசிடம் கேட்டுவிட்டு வருவதாக அட்வகேட் ஜெனரல் கூறிவிட்டு சென்றுள்ளார். அரசின் பதிலை பொறுத்து போராட் டத்தை வாபஸ் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.இதனிடையே சென்னை பல்லவன்இ ல்லத்தில் இன்று தொழிற் சங்க தலைவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அரசு அதிரடி திட்டம் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் தவிக்கும் நிலையில் அதிரடி திட்டம் ஒன்றை அரசு தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரலாம் என அரசு நம்புகிறது. அப்படி வேலை நிறுத்தம் வாபஸ் ஆகாவிட்டால் பயணிகளை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்க திட்டம் ஒன்றை தயாராக வைத்துள்ளது.சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான பேருந்துகளையும் அதன் டிரைவர்களோடு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இதற்கு வசதியாகவே 12-ந் தேதி அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.பள்ளி மற்றும் கல்லூரி பஸ்களை பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*