Home » தமிழ்நாடு » அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதல்

அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதல்

திருத்தணி,ஜன.10: திருத்தணி அருகே பழுதாகி நின்ற அரசு பஸ்மீது எதிரே வந்த பேருந்து நேருக்குநேர் மோதியதால் பள்ளி மாணவிகள் 6 உட்பட 8பேர் பலத்த காயமடைந்தனர்.இதுகுறித்து தற்காலிக பஸ் ஓட்டுனர்கள்மீது வழக்குப்பதிவுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருத்தணி அடுத்த நல்லாட்டூர் கிராமத்தில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு அரசு பேருந்து ஒன்று திருத்தணி நோக்கி வந்துகொண்டிருந்தது.

இந்த பேருந்து திருத்தணி அடுத்து கொசஸ்தலை ஆற்று பாலத்தில் வரும்போது பஸ் பழுதாகி மேம்பாலத்தில் நின்றது.அப்போது இதை கவனிக்காமல் வந்த மற்றொரு அரசு பேருந்து வேகமாக வந்து நின்ற பேருந்து மீதுமோதியது.
அப்போது பழுதாகி நின்ற பேருந்தில் நின்றுகொண்டிருந்த நடத்துனர் ராஜேஷ் காயம் அடைந்தார். மேலும்பேருந்தில் பயணம்செய்த 6 பள்ளி மாணவிகள் உட்பட 8பேர் பலத்த காயமடைந்தனர்.

இதகுறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 8பேரையும் மீட்டு பூனிமாங்காடு பகுதியில் உள்ள அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்காலிக ஊழியர்களான இரண்டு பேருந்து டிரைவர்கள் பாண்டியன், ஞானஒளி ஆகிய இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்காலிக ஊழியர்களால் விபத்து அதிகமாக நடப்பதாகவும் பயணிகள் அச்சத்தில் பயணிப்பதாகவும் கூறுகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*