Home » சினிமா » விஜய் ஆண்டனி படத்துக்கு வினியோகஸ்தர்கள் தடை

விஜய் ஆண்டனி படத்துக்கு வினியோகஸ்தர்கள் தடை

சென்னை, ஜன.9: விஜய் ஆண்டனி நடித்த அண்ணாதுரை படத்தில் ஏற்பட்ட ரூ.4 கோடி நஷ்டத்தை திருப்பி தராததால் இனிமேல் அவர் நடிக்கும் படங்களை வாங்கவும், தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் வினியோகஸ்தர்கள் தடை விதித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான அண்ணாதுரை படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரூ.6.50 கோடிக்கும், கேரள உரிமையை ரூ.32 லட்சத்திற்கும் அலெக்சாண்டர் என்பவர் வாங்கினார்.

அண்ணாதுரை படம் எதிர்பார்த்த அளவு ஓடாததால் ரூ.2.50 கோடி மட்டும் வசூல் செய்தது. இதனால் ரூ.4 கோடி நஷ்டத்தை விநியோகஸ்தர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் 10 லட்சம் வசூல் செய்து 22 லட்சம் நஷ்டத்தை உண்டாக்கியிருக்கிறது.

அண்ணாதுரை ரீலீசுக்கு பின் வசூல் கணக்குகளுடன் விஜய் ஆண்டனியை சந்தித்த வினியோகஸ்தரிடம் நஷ்ட தொகையை திரும்ப கொடுக்க முடியாது முதல் பிரதி அடிப்படையில் நஷ்டத்தை சரிகட்ட ஒரு படம் நடித்து தருகிறேன். அதில் எனது சம்பளம் ரூ. 8 கோடி, தயாரிப்பு செலவு ரூ.6 கோடி மொத்தம் ரூ.14 கோடி கொடுத்தால் தயாரிப்பாளர் தலையீடு இல்லாமல் படத்தை முடித்து தருகிறேன் என விஜய் ஆண்டனி கூறியதாக தெரிகிறது. அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வினியோகஸ்தர் அலெக்சாண்டர் ‘நீங்க நடிச்ச படத்தில் பிச்சைகாரன் மட்டும் தான் அதிகமாக ரூ.7 கோடி வசூல் செய்த படம்.

இது தான் உங்களோட ஒரிஜினல் மார்கெட் இதனை கவனத்தில் கொள்ளாமல் எட்டு கோடி சம்பளம் 14 கோடியில் முதல் பிரதி, ரீலீஸ் செலவு 5 கோடி ஆக மொத்தம் 19 கோடியை நீங்கள் நடிக்கும் படம் வசூல் செய்யும் சாத்தியம் இல்லை’ என்று கூறியுள்ளார்.

இதை விஜய் ஆண்டனி ஏற்கவில்லை. மேலும் 4 கோடி நஷ்டத்தை திருப்பிக் கொடுக்க பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.
இதனால் வேறு வழியின்றி அண்ணாதுரை படத்தின் விநியோக உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் ஒன்று கூடி விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து இனி வெளிவர உள்ள படங்களை வாங்கவும், தியேட்டரில் ரீலீஸ் செய்ய வும் மாட்டோம் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வினியோகஸ்தர்கள் சங்கம் விஜய் ஆண்டனிக்கு ரெட் கார்டு (தடை) போட்டுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*