Home » அரசியல் » ஓபிஎஸ்சை புகழ்ந்ததற்கு சட்டசபையில் பரபரப்பு

ஓபிஎஸ்சை புகழ்ந்ததற்கு சட்டசபையில் பரபரப்பு

சென்னை, ஜன.9: சட்டசபையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக உறுப்பினர் புகழ்ந்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபை கேள்வி நேரத்தின் போது எம்எல்ஏ பன்னீர்செல்வம் பேசுகையில், முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் புகழாரம் சூடும் வகையில் பேசினார்.

அதற்கு திமுக உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் இது போன்று பேசுவதை அனுமதிக்க முடியாது என சபாநாயகரிடம் முறையிட்டனர். இதனால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஏற்கனவே பலமுறை உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வரையோ, துணை முதல்வரையோ, அந்தந்த கட்சி தலைவர்களையோ புகழ்ந்து பேசுவதை யாரும் தடுக்க முடியாது என கூறியுள்ளேன் என சமாதானப்படுத்தினார்.

அவை முன்னவரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்  செல்வம் பேசுகையில் சட்டசபையில்  அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பேசும் போது என்னை புகழ்ந்து பேச வேண்டாம். புகழ்ந்து பேச தகுதியான நபர் மறைந்த முதல்வர்ஜெ யலலிதா மட்டுமே.  ஆகவே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேசும் போது என்னை வாழ்த்தியோ, புகழ்ந்தோ பேசவேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*