Home » சினிமா » பொங்கல் ரேசில் பாஸ்கர் தி ராஸ்கல், மதுர வீரன், மன்னர் வகையறா அவுட்

பொங்கல் ரேசில் பாஸ்கர் தி ராஸ்கல், மதுர வீரன், மன்னர் வகையறா அவுட்

சென்னை, ஜன.9: பொங்கல் பண்டிகைக்கு 6 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் தியேட்டர் கிடைக்காத காரணத்தால் 3 படங்கள் போட்டியிலிருந்து வெளியேறி உள்ளது.

தானா சேர்ந்த கூட்டம், குலேபகாவலி படங்கள் அதிக திரையில் வெளியாவதால் விக்ரமின் ஸ்கெட்ச் படம் தியேட்டர் கிடைக்காமல் திண்டாடி வருகிறது.
பண்டிகைகள் என்றால் புதுப்படங்கள் அதிக அளவில் வெளியாவது வழக்கம். ஆனால் சமீப காலமாக ஒருசில படங்கள் மட்டுமே வெளியாகி வருகிறது.

வரும் பொங்கல் பண்டிகைக்கு ஆறு படங்கள் வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இதில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் 450 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. பிரபு தேவா நடித்துள்ள ‘குலேபகாவலி’ படமும் 250 தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களையும் ஒரே வினியோகஸ்தர் வாங்கிவிட்டதால் எளிதாக தியேட்டர் கிடைத்து விட்டது.

விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படம் வெளியாவது உறுதி என்றாலும் பிரதான தியேட்டர்கள் குறைவாக கிடைத்துள்ளதால் அந்த படம் திண்டாடி வருகிறது. இந்த நிலையில் குறைவான தியேட்டர்கள் கிடைத்ததால் அரவிந்த் சாமியின் பாஸ்கர் தி ராஸ்கல் படம், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள மதுர வீரன் ஆகிய படங்கள் பொங்கல் போட்டியிலிருந்து வெளியேறியது.

விமல் தயாரித்து நடித்துள்ள மன்னர் வகையறா படம் நேற்றுதான் சென்சார் ஆனதால் இனிமேல் அந்த படத்திற்கு தியேட்டர் கிடைப்பது சந்தேகமே. அதனால் அந்த படமும் பொங்கல் போட்டியில் இருந்து நிச்சயம் வெளியேறி விடும் என தெரிகிறது. இதன் காரணமாக பொங்கல் திருநாளுக்கு 3 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*