Home » Flash News » கவர்னர் உரை: திமுக, காங் புறக்கணிப்பு

கவர்னர் உரை: திமுக, காங் புறக்கணிப்பு

சென்னை,ஜன.8:தமிழக சட்டசபையில் தமிழில் வணக்கம் சொல்லி தனது உரையை கவர்னர் பர்வாரிலால் புரோஹித் தொடங்கினார். அப்போது திமுக , காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபையில் 2018-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. காலை 9.40 மணியளவில் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து 9.48 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் பேரவைக்கு வருகை தந்தனர்.

இதை தொடர்ந்து 9.59 மணியளவில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். 10 மணியளவில் தமிழ்தாய் இசைக்கப்பட்ட பின்னர் தனது உரையை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வாசிக்கத் தொடங்கினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார். அப்போது திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து பேச அனுமதிக்குமாறு கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அனைத்து உறுப்பினர்களும் அமருமாறு கூறி, இதனைஏற்க மறுத்து ஸ்டாலின் உட்பட திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து பேச அனுமதிக்குமாறு கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர். அப்போது குறுக்கிட்ட கவர்னர் தமிழில் உட்காருங்கள், உட்காருங்கள் என சபாநாயகர் அமைதிபடுத்த முற்பட்டார். உட்காருங்கள் என கவர்னர் தமிழில் பேசியதை தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜை தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதன் பின்னரும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச முற்பட்டார். அப்போதும் கவர்னர் குறுக்கிட்டு உட்காருங்கள் என தமிழில் மீண்டும் கூறினார். அப்போது அவையில் சிரிப்பொலி ஏற்பட்டது. இருமுறை கவர்னர் கூறியும் அதனை ஏற்க மறுத்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

அப்போது கவர்னர் சட்டசபை கூட்டத் தொடர் இன்னும் சில தினங்கள் நடைபெற உள்ளது. அப்போது விவாதங்கள் நடக்கும் போது உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். ஆகவே அமைதி காத்து உட்காருமாறு திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்களை வலியுறுத்தினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*