Home » அரசியல் » சோனியா, ராகுலுக்கு திருநாவுக்கரசர் நன்றி

சோனியா, ராகுலுக்கு திருநாவுக்கரசர் நன்றி

சென்னை,ஜன.7:தமிழக காங்கிரஸ் தலைவராக தொடர எனக்கு வாய்ப்பு அளித்த சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்வதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் நிருபர்களுக்கு திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்து கொண்டேன். சாதாரண உறுப்பினரான என்னை அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும், கர்நாடகா, ஆந்திரா காங்கிரஸ் பொறுப்பாளராகவும் சோனியா, ராகுல் நியமித்தனர்.

அதனை தொடர்ந்து என்னுடைய பணியை பாராட்டும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை அளித்தனர். தலைவராக பதவியேற்று தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் எனக்கு ஆதரவு அளித்து வரும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவத்து கொள்கிறேன். தொடர்ந்து தலைவராக நீடிக்க மீண்டும் எனக்கு வாய்ப்பு அளித்த சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நன்றியை தெரிவித்து கொள்ளும் அதே வேளையில், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் சபதமும், உறுதியும் ஏற்போம்.

தமிழகத்தில் 2 கோடி மக்கள் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 4 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவை எடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை அரசு தவிர்த்து, தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்ற முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*