Home » சென்னை » சிலம்ப போட்டியில் பள்ளி மாணவர் சாதனை

சிலம்ப போட்டியில் பள்ளி மாணவர் சாதனை

சென்னை, ஜன.7: கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பருத்திப் பட்டில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவன் முதல் பரிசினை பெற்று சாதனை படைத்தார்.

ஷாவோலின் புத்தாஸ் குங்பூ மற்றும் புத்தாஸ் சிலம்பம் பள்ளி நடத்திய மாநில அளவிலான சிலம்பம் போட்டி டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 10 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் நான்காம் வகுப்பு மாணவன் வி.கணிஷ் முதலிடம் பெற்று, பரிசினை தட்டிச் சென்றார். அதற்கான சான்றிதழ் மற்றும் கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சாதனை படைத்த மாணவனை பள்ளி தாளாளர் எம்.வி.எம் வேல்மோகன், பள்ளி முதல்வர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*