Home » விளையாட்டு » நடக்கவே முடியாத நிலையில் ஜெயசூர்யா

நடக்கவே முடியாத நிலையில் ஜெயசூர்யா

கொழும்பு, ஜன. 7: இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா நடக்கவே முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.

கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த படியாக கொண்டாடப் படும் வீரர்களுள் இலங்கை வீரர் ஜெயசூர்யாவும் ஒருவர். இவர் தனது அதிரடியான பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சு மூலம் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்தவர்.

கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை அவர் வகித்து வந்தார். இலங்கைக் கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழுத் தலைவராகவும் ஜெயசூர்யா பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், ஜெயசூர்யா நடக்கவே முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இதனால், ஊன்றுகோல் உதவியால் ஜெயசூர்யா நடந்து வருகிறார். ஊன்றுகோலுடன் அவர் நடப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*