Home » சினிமா » தகுதியை அடையவில்லை:கமல்ஹாசன்

தகுதியை அடையவில்லை:கமல்ஹாசன்

‘கைத்தட்டல் கிடைக்கும்போது தகுதியானவன் என்று தோன்றினாலும் தனிமையில் இருக்கும்போது அந்த உணர்வு ஏற்படவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

மலேசிய நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கெல்லாம் பதிலளித்து அவர் பேசியதாவது, எனது குரல் எண்ணம் எல்லாம் உங்கள் எண்ணம். என்னை பேச வைத்துக்கொண்டு இருக்கும் உணர்வு உங்கள் உணர்வு.

வயது ஆக ஆக ஆன்மிகத்தில் நாட்டம் வந்ததா என்று கேட்கிறார்கள். நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் தான் பார்த்துக்கொள்வேன். வயது ஆக ஆக ஞானமும் அறிவும் வளரும். அந்த அறிவு பகுத்தறிவாளனாக தான் மாறும் என்ன தெரிவித்தார். டுவிட்டரில் நான் எழுதும் தமிழுக்கு காரணம், சில விஷயங்களை நேரடியாக சொன்னால் அது கெட்ட வார்த்தையாகி விடும். அவற்றை நான் நல்ல தமிழில் கூறும் போது அது சில தமிழர்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால் அதுவும் நன்மைக்கே.

தற்போது எனக்கு எது தேவை என்பது எனக்கே தெரியவில்லை. தற்போது எனக்கு கிடைக்கும் கரகோஷங்களுக்கு நான் தகுதிபெற்றிருக்கிறேனா… நீங்கள் என்னை பற்றி பேசும் போது தகுதியானவராக தான் தோன்றுகிறது. ஆனால் தனிமையில் அமர்ந்து யோசித்தால் அந்த தகுதியை நான் இன்னும் அடையவில்லை என்று தோன்றுகிறது.

மற்றவர்கள் கட்டை விரலை கூட நனைக்க தயங்கிய போது நான் கழுத்தளவு நீரில் இறங்கியதாக கூறுகிறார்கள் நான் இறங்கவில்லை 2015ல் வெள்ளம் வந்தது போது தற்போது கழுத்தளவு அசிங்கமான விஷயங்கள் சூழ்ந்து உள்ளது. அதை சரி செய்ய தான் நாங்கள் வந்துள்ளோம். இது தனி மனித செயலாக இருக்க கூடாது. பின்னாளில் இருந்தான் வந்தான் சென்றான் என்று இல்லாமல் இருக்கிறான் என்று பெயர் நிலைக்க வேண்டும். உலகத்தின் மையம் நீங்கள் எல்லாம். நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல திறமையை நினைவுக்கொள்ளுங்கள் என்று பேசினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*