Home » இன்று... » தமிழக மக்களை நன்றாக வாழ வைக்கணும்:ரஜினி

தமிழக மக்களை நன்றாக வாழ வைக்கணும்:ரஜினி

கோலாலம்பூர், ஜன.7:தன்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்று நடிகர் ரஜினிகாந்த் மலேசிய விழாவில் பேசியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனையும் சந்தித்து பேசினார்.

சென்னை திநகரில் நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்
சத்திர கலை விழாக்கள் நடத்தப்பட்டு நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை தொடங்கி இரவு 12 மணி வரை இந்தநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைவரும் பார்ப்பதற்காக பெரிய எல்இடி ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். கமல்ஹாசனும் அரசியல் களத்தில் நுழைவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மலேசியாவில் சந்தித்துப் பேசினார்கள். நட்சத்திர கலைவிழாவின் போது இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அரசியலில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் இருவரும் இருக்கும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகிறது.
மலேசியாவில் நடந்த கலை விழாவில் ரஜினி பேசியதாவது, சினிமா பயணம் பற்றி கேட்கிறார்கள். 42 ஆண்டுகள் சினிமா பயணத்தில் முடிந்த வரை நல்ல கருத்துக்கள் சொல்ல முயற்சி பண்ணிருக்கிறேன்.

என் வாழ்க்கையில் குறைந்தபட்ச ஆசை ஸ்கூட்டர் வாங்கனும்… டீசன்ட் மிடில் கிளாஸ் லைப் வாழனும் என்பதே. பெரிய ஆசை இருக்கிறது. என்னை வாழ வைத்த தமிழக மக்களை நல்லா வாழ வைக்கனும்.
குடும்பம் சுகமா சுமையா என்பது தனி நபர் பொறுத்தது. பிற்காலத்தில் என்னவாக நிறைவு கூறப்பட விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார்கள், வெறும் சினிமாவில் நடித்து மகிழ்வித்த நடிகனா என் வாழ்க்கை முடிந்திட கூடாது என்று நினைக்கிறேன். இளைஞர்கள் அனைவருக்கும் நான் கூறுவது தாய், தந்தை, குடும்பம் தான் முக்கியம். அவர்கள் தான் தெய்வங்கள். அதை செய்தால் வாழ்க்கையில் மீதி எல்லாம் உங்களை தேடி வரும் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*