Home » Flash News » லாலுவுக்கு நாளை தண்டனை அறிவிப்பு

லாலுவுக்கு நாளை தண்டனை அறிவிப்பு

ராஞ்சி, ஜன.3:கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

அவரது வக்கீல் மரணமடைந்ததை தொடர்ந்து இன்று அறிவிக்கப்பட இருந்ததாக இருந்த தண்டனை தள்ளிவைக்கப்பட்டது.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவருமான லாலு பிரசாத் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் இறுதியில் தீர்ப்பளித்திருந்தது.

அவர்களுக்கான தண்டனை விவரம், ஜனவரி மாதம் 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இன்று மூத்த வழக்குரைஞர் ஒருவர் மரணம் அடைந்ததால் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று ஒத்திவைக்கப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*