Home » Flash News » மும்பை: தலித் அமைப்புகள் போராட்டம்

மும்பை: தலித் அமைப்புகள் போராட்டம்

மும்பை, ஜன.3:மகராஷ்டிராவில் இன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் காரணமாக ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

மகராஷ்டிரா மாநில புனே பகுதியில் 1818ம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய படைக்கும் பேஷ்வர் ஆட்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் கிழக்கிந்திய படை வெற்றிபெற்றது.

இந்த படையில் தலித் அமைப்பினர் இடம் பெற்று இருந்ததால் இந்த வெற்றி தினத்தை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். நேற்று புனே அருகே குரேகான் பகுதியில் நடைபெற்ற வெற்றி தின விழாவில் மோதல் ஏற்பட்டு தலித் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து 200க்கும் மேற்பட்ட தலித் அமைப்புகள் இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து புனே மற்றும் பீமா குரேகான் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இதை மீறி இன்று காலை மகராஷ்டிராவில் செம்பூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முழு அடைப்பு பேராட்டம் நடைபெற்றது. தண்டவாளங்களில் ஏராளமானோர் அமர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

சாலைகளில் மறியல் போராட்டம் நடைபெற்றதால் பேருந்துகள் ஓடவில்லை. ஆட்டோ உள்ளிட்ட பிற வாகனங்களும் நிறுத்தப்பட்டன.கல்வி நிலையங்கள் மூடப்பட்டு
இருந்தன.

பல்வேறு இடங்களில் பஸ்களை வழிமறித்து டயரிலிருந்து காற்றை பிடுங்கிவிட்டனர். பள்ளிக்கூட பேருந்துகளில் 99 சதவீதம் ஓடவில்லை. மும்பையில் பிரசித்திப் பெற்ற டப்பாவாலாக்களும் இன்று மதிய உணவை எடுத்துச் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அனுமன் நகர், சாந்திவாலி, சங்க்ராஸ் நகர் போன்ற முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.மாநிலம் முழுவதும் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் பட்னாவிசுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். உள்ளூர் புறநகர் ரெயில்கள் ஓடாததால் பயணிகள் பெறும் அவதி பட்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*