Home » Flash News » ரஜினி ரசிகர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

ரஜினி ரசிகர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

சென்னை,ஜன.3:தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சரை தரக்குறைவாக பேசியதுடன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரஜினி ரசிகர் பழனி மீது கமிஷனர் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் புகார் அளித்து உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31-ந் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய போது தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் சீமான்,வேல்முருகன், தனியரசு போன்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளத்தில் ரஜினி பழனி என்பவர் தமிழக அரசியல் கட்சி தலைவர்களான சீமான்,வேல்முருகன், தனியரசு மற்றும் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ, இயக்குனர் கவுதமன் ஆகியோரை கீழ்த்தரமான ஆபாச வார்த்தைகளால் பேசுவதோடு இல்லாமல் இவர்கள் அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து
உள்ளார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும் ரஜினி பழனி பேசிய வலைதள பேச்சையும் அத்துடன் இணைத்துள்ளார். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*