Home » Flash News » ராஜ்யசபை ஒத்திவைப்பு

ராஜ்யசபை ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜன.3:மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதா இன்று காலை தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பகல் 12 மணி வர சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று காலை சபை கூடியதும் மாகராஷ்டிராவில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவத்தை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் எழுப்பி பேசினார். அது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததற்கு சபை தலைவர் வெங்கையா நாயுடு அனுமதிக்கவில்லை.

இதையடுத்து பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் எழுந்து நின்று பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் வன்முறையில் ஈடுபடுவதாக கூறி கோஷங்கள் எழுப்பினர். இதற்கு பிஜேபி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால் கூச்சல்- குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து மதியம் வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*