Home » Flash News » விசாரணை கமிஷன் முன்பு சுதா சேஷய்யன்

விசாரணை கமிஷன் முன்பு சுதா சேஷய்யன்

சென்னை. ஜன.3: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு, ஜெய லலிதா உடலை எம்பார்மிங் செய்த டாக்டர் சுதா சேஷய்யன் ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேற்றைய தினம் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா ஆஜராகி 4 மணி நேரம் சாட்சியம் அளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார்.கமிஷனுக்கு அளித்த விவரங்களை வெளியே பகிர்ந்துகொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, டிடிவி தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தது தொடர்பாக பென்டிரைவ் ஒன்றை அளித்தார்.
வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ கிளிப்பை விட தெளிவான காட்சிகள் இதில் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை நீதிபதி பதிவு செய்து கொண்டதாக ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

விசாரணைக் கமிஷன் உத்தரவை தொடர்ந்து ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் வேதா நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களின் பட்டியலை அளித்துள்ளதாக தெரிகிறது.
பூங்குன்றன் அளித்த 15 பேர் கொண்ட பட்டியலில் 2016 ஜனவரி முதல் டிசம்பர் இறுதிவரை பணியாற் றிய சமையல்காரர்கள், கார் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள் பெயர்கள் இடம் பெற்று இருந்ததாக தெரிகிறது.

இதனிடையே, சம்மன் அனுப்பப்பட் டுள்ள அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி இம்மாதம் 5-ந் தேதி வரை அவகாசம் கேட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு விசாரணைக் கமிஷன் கால அவகாசம் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு, ஜெயலலிதா உடலை எம்பார்மிங் செய்த டாக்டர் சுதா சேஷய்யன் ஆஜரானார்.

டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா இறந்த பிறகு அவருடைய உடல் கெடாமல் இருப்பதற்காக எம்பார்மிங் என்ற தொழில்நுட்பத்தில் ஜெயலலிதா உடலை பதப்படுத்தியவர் சுதா
சேஷய்யன். அது பற்றிய விவரங்களை விசாரணைக் கமிஷனிடம் அவர் தெரிவித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*