Home » Flash News » எம்எல்ஏக்களுக்கு முதல்வர் கட்டளை

எம்எல்ஏக்களுக்கு முதல்வர் கட்டளை

சென்னை, ஜன.3:தமிழக சட்டசபை 8-ம் தேதி கூட உள்ள நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதில் சட்டசபையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் அறிவுரை கூறினார். எதிர்க்கட்சி யினரின் விமர்சனங்களை முறையாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் 8-ம் தேதி தொடங்க உள்ளது. இது ஆண்டின் முதலாவது கூட்டம் என்பதால் முதல் நாளில் கவர்னர் உரை நிகழ்த்துகிறார். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் பிரதான அணிகளான இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணிகள் இணைப்பிற்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டத் தொடர் என்பதாலும், எம்.எல்.ஏ.வாக தினகரன் முதல் முறையாக பங்கேற்க உள்ளதாலும் கூட்டத் தொடர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 104-எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, சட்டமன்றக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதுடன், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*