Home » Flash News » அதிமுகவுக்கு தனி தொலைக்காட்சி

அதிமுகவுக்கு தனி தொலைக்காட்சி

சென்னை, ஜன.3:அதிமுகவுக்கு தனி தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் ஆரம்பிக்கப்பட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஜெயலலிதா ஆட்சியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக இருந்த நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா தொலைக் காட்சி தற்போது இளவரசியின் மகன் விவேக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதை மீட்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கென தனி தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். அதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறி உள்ளார்.

மேலும், கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதால், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*